யார் தமிழன்?
தமிழ் நாட்டில் பிறப்பவன் தமிழனா?
தமிழ் நாட்டில் வேலை புரிபவன் தமிழனா?
கூறு தமிழ் தாயே!
தமிழ் பிழை இன்றி எழுதுபவன் தமிழனா?
தமிழ் சரளமாக பேசுபவன் தமிழனா?
கூறு தமிழ் தாயே!
வடக்கிலிருந்து வந்து வசிப்பவன் தமிழனா?
என்னை போல் எங்கேயோ இருப்பவன் தமிழனா?
கூறு தமிழ் தாயே!
பிராமணன் தமிழனா? இல்லையேல்,
திராவிடன் மட்டுமே தமிழனா?
கூறு தமிழ் தாயே!
என் தமிழ் தாயே,
உன் தாய் உள்ளம் பிரிவு பார்க்குமா?
இல்லை! இல்லை! இல்லை!
சந்தியா சுப்பிரமணியனுக்கு என் நன்றிகள்
Written on July 11, 2019