தமிழில் விஞ்ஞானத்தை வளர்ப்போம்! (Science for all languages!)
கடந்த நூற்றாண்டில் அறிவியல் ஆங்கிலத்தில் பெரும் அளவில் நடந்திருக்கிறது. முதல் உலகப் போருக்கு பிறகு, இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் குவிந்திருக்கிறார்கள். ஆகையால், அவர்களுடைய கண்டுபிடிப்புகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டன.
ஆனால், இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு சூழ்நிலை வேறு விதமாக இருந்தது. அப்போது ஜெர்மனியில் விஞ்ஞானம் செழித்து வளர்ந்து கொண்டிருந்தது. கவுஸ் ஆய்ல்லர் போன்ற அறிஞர்கள் பல்வேறு கண்டுபிடிப்புகள் கண்டறிந்தனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அரேபியாவில் இபின் சீன மருத்துவத்தில் பல சாதனைகளை புரிந்தார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரீஸில் பித்தகோரஸ் கணிதத்தை வளர்த்தார்.
எதற்காக இந்த பட்டியல் கொடுத்திருக்கிறேன்? உலகத்தில் எல்லா மூலைகளிலும் விஞ்ஞானிகள் வாழ்ந்த்திருக்கிறார்கள் என்று காட்டுவதற்குத்தான்!
ஆதலால் விஞ்ஞானம் ஆங்கிலத்தில் தான் செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை. வேறு மொழிகளில் விஞ்ஞானம் வளர்ப்பதற்க்கு நல்ல காரணங்கள் உண்டு: விஞ்ஞானம் கணிதத்தில் மட்டும் பிறக்காது. புதிய கண்டுபிடிப்புக்கு பல மூல காரணங்கள் இருக்கலாம். ஐன்ஸ்டீன் ரெலடிவிட்டி கண்டுபிடித்ததற்கு மாக் என்ற ஜெர்மானிய எழுத்தாளரின் கருத்துகள் தூண்டுதல் கொடுத்தது. அதே போல், நான் செய்யும் ஆராய்ச்சிக்கு வள்ளுவர், கம்பன், பாரதியார் போன்ற மேதைகளின் கருத்துகள் உதவியுள்ளன.
எதிர்காலத்தில் அறிவியல் வளர்வதற்கு பல கருத்துகள் உபயோகமாக இருக்கலாம். அதற்கு பல்வேறு கலாச்சாரங்களில் உள்ள கோட்பாடுகள் உதவலாம். விஞ்ஞானம் வளர்ச்சி அடைவதற்கு பல மொழிகளில் ஆராய்ச்சி செய்வோம்!
Science for all languages!
In the last hundred years, science has primarily been done in English. After the first world war, many famous scientists fled to America and England. As a result, their subsequent research ended up being published in English.
However, two hundred years ago, the state of scientific research was very different. Science flourished in Germany and Switzerland. Gauss and Euler performed groundbreaking work. A thousand years ago, the Persian Ibn-Sina did seminal work in medicine and philosophy. Two thousand years ago, the Greek Pythagoras dramatically advanced mathematics.
Why am I bothering to list these facts? Simply to demonstrate that science hails from all corners of the globe.
There’s no reason science has to be done solely in English! There’s good reason to pursue science in other languages as well. Scientists don’t draw their ideas solely from pure reason; philosophy and literature contribute as well. Einstein drew significant inspiration from the philosopher Mach. For my own research, I’ve drawn from Valluvar, Kamban, and Bharatiyar (for English readers, I encourage googling!).
For science to keep growing, we need many new ideas. Drawing upon the history and literature of many cultures can only help us. Let’s do science in many languages!
Translation Note: Bilinguals might note the English version differs a little from the Tamil version. Some idioms don’t translate directly, but I’ve tried to preserve the spirit of the essay.